மடிப்பாக்கம் பகுதியில் சேகரமாகும் குப்பைகள், ராம் நகர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுவதால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மடிப்பாக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் என்பதால், நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பைகள் முன்பு லட்சுமி நகரில் கொட்டப்பட்டு வந்தன. அந்நகரில் குடியிருப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு குப்பைகள் கொட்ட எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், அப்பகுதி பொதுநலச் சங்கத்தினர் கோர்ட்டுக்கு சென்று லட்சுமி நகரில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி விட்டனர். இதையடுத்து, ராம் நகர் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது, ராம் நகரை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராம் நகர் பகுதி பொதுநலச் சங்கத்தினர் கூறுகையில், " ராம் நகர் குடியிருப்பு பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், ஒரு கி.மீ., தூரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசு, ஈக்களின் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு எற்படுகிறது. குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்த கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நன்றி
தினமலர். ஆகஸ்ட் 27,2010
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71135&Print=1
No comments:
Post a Comment