சென்னை மடிப்பாக்கம் வளர்ந்து வரும் பகுதிகளில் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் மடிப்பாக்கமும் ஒன்று. தற்போது ஊராட்சியாக இருக்கும் இந்த பகுதி குடிசை பகுதிகளை விட மாடி வீடுகளே அதிகம். விரைவில் வளர்ச்சி அடையும் பகுதி என்று நினைத்து இடம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் இப்போது ஏன் வந்தோம்??? என்ற அளவிற்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பது உண்மையான வேதனை.
குறிப்பாக ராம் நகர் வடக்கு தெற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி எதுவும் கிடையாது .சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாக காட்சி அளிக்கின்றன. மழை பெய்தால் நடக்கவே முடியாத அளவிற்கு சாலைகள் உள்ளன.
ரேஷன் கடை, தபால் நிலையம் என அனைத்தும் 2 கி மீ தூரத்திற்கு அப்பால் உள்ளது. இதுவரை மடிப்பக்காத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் கிடையாது. தனியார் பள்ளிகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். மடிப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகிறார்கள்.
இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அரசு சோழிங்கநல்லூரில் ஒதுக்கியுள்ள இடத்தில் கொட்டாமல் ராம் நகர் தெற்கு குடியிருப்பு பகுதிகளில் கொட்டி தினமும் அதை எரிக்கின்றனர்.
இதனால் ராம் நகர் 9 ஆவது முதன்மை சாலையில் குடி இருக்கும் பொதுமக்கள் வீட்டையே காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கின்றதா என்ற கேள்வி உருவாகி உள்ளது...
நன்றி இன்றைய நாளிதழ் 10 /05 /2011
No comments:
Post a Comment