Saturday, June 18, 2011

குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் - மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்தது

மடிப்பாக்கம் ராம்நகர், குபேர் நகர், சதாசிவம் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளின் தரைத்தளம் வரை கழிவுநீரும் மழைநீரும் நிரம்பியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். மழைநீரை வெளியேற்ற மடிப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை மடிப்பாக்கம் பாலையா கார்டன் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் தங்கரத்தினம், கவுன்சிலர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ‘மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர். அதன்பின் மறியல் கைவிடப்பட்டது.

நன்றி தினகரன்

No comments:

Post a Comment